/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூங்கா காம்பவுண்ட் கேட்டை இடித்து சேதப்படுத்திய யானைகளால் அச்சம்
/
பூங்கா காம்பவுண்ட் கேட்டை இடித்து சேதப்படுத்திய யானைகளால் அச்சம்
பூங்கா காம்பவுண்ட் கேட்டை இடித்து சேதப்படுத்திய யானைகளால் அச்சம்
பூங்கா காம்பவுண்ட் கேட்டை இடித்து சேதப்படுத்திய யானைகளால் அச்சம்
ADDED : ஜன 22, 2024 12:33 PM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர், பூங்கா காம்பவுண்ட் கேட்டை இரு யானைகள் சேதப்படுத்தின.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையை ஒட்டி, 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா உள்ளதால், இந்த சாலையில் யானைகள் கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இரு யானைகள், வனப்பகுதியில் இருந்து வெளியேறி, பண்ணாரி சாலை வந்து, பவானிசாகர் பூங்கா பகுதியை முற்றுகையிட்டன. சிறிது நேரத்தில் பூங்காவின் காம்பவுண்ட் கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள், வனத்துறைக்கு தகவல் தந்தனர். அவர்கள் வருவதற்குள், அங்கிருந்து மீண்டும், புங்கார் கிராம பகுதிக்கு சென்ற காட்டு யானைகளை, பொதுமக்கள் விரட்டியடித்தனர். பின் அருகிலிருந்த, மீன் பண்ணை வழியாக வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால், பயிர்கள் அதிகளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால், மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டியுள்ள, காராச்சிக்கொரை பகுதியில், யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால், யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
இவ்வாறு கூறினர்.