/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
52 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய காவிலிபாளையம் குளம் கரையில் 20 அடி துாரத்துக்கு ஏற்பட்ட பிளவால் அச்சம்

ADDED : டிச 01, 2024 01:19 AM
52 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய காவிலிபாளையம் குளம்
கரையில் 20 அடி துாரத்துக்கு ஏற்பட்ட பிளவால் அச்சம்
புன்செய் புளியம்பட்டி, டிச. 1-
புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள காவிலிபாளையம் குளம், 451 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீர்வளத்துறைக்கு சொந்தமான குளத்துக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தொடர்ச்சியாக நீர் வந்ததால் தற்போது நிரம்பியுள்ளது.
குளத்திலிருந்து உபரி நீர் வெளியேறும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குப்பந்துறை அருகே உள்ள குளத்தின் வடக்கு மண் கரையில் அழுத்தம் தாங்காமல் கரையில், 20 அடி நீளத்துக்கு நேற்று மதியம் பிளவு ஏற்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால், குளத்துக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மண் கரையில் உடைப்பு ஏற்படும் முன், கரையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சத்தி தாசில்தார் சக்திவேல், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா ஆகியோர், காவிலிபாளையம் குளக்கரை பகுதியில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த, 1972ல் காவிலிபாளையம் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது, 52 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குளம் நிரம்பி உள்ளது. இந்நிலையில் மண் கரையில் பிளவு ஏற்பட்டுள்ளது. கரை சேதமடையும் முன் சீரமைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
'கரையில் மேலும் விரிசல் ஏற்படாமல் தடுக்க, தற்போது மண் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் மணல் மூட்டை அடுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.