/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.எஸ்.டி., வரிக்காக நாளை கடையடைப்பு தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
/
ஜி.எஸ்.டி., வரிக்காக நாளை கடையடைப்பு தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
ஜி.எஸ்.டி., வரிக்காக நாளை கடையடைப்பு தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
ஜி.எஸ்.டி., வரிக்காக நாளை கடையடைப்பு தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
ADDED : நவ 28, 2024 06:47 AM
ஈரோடு: ''கட்டட, கடை வாடகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, நாளை (29) முழு கடையடைப்பு நடத்துகிறோம்,'' என, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
ஈரோட்டில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நவ., 1 முதல் கட்டடம், கடை வாடகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, சில வழிமுறைகளில் திரும்ப
பெற மத்திய அரசு அறிவித்துள்ளது. 1.50 கோடி ரூபாய்க்கு கீழ் 'விற்றுமுதல்' உள்ள-வர்கள் ஜி.எஸ்.டி.,
செலுத்துவதில்லை. ஜி.எஸ்.டி., பதிவில்லாத-வர்கள், வாடகைக்கு ஜி.எஸ்.டி., செலுத்தி, உள்ளீட்டு வரியை
திரும்ப பெற முடியாது. சிறு, குறு, நடுத்தர நிறுவனம், வியாபா-ரிகள் பாதிப்பர். குடும்ப நபரில் ஒருவர் பெயரில்
கட்டடமும், மற்-றவர் பெயரில் தொழிலும் இருந்தாலும், வாடகை செலுத்த-வில்லை என்றாலும், உத்தேச
வாடகையை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., செலுத்த அரசு அறிவித்துள்ளது. இந்த வரியை நீக்க வேண்டும்.தவிர மாநில அரசால், தொடர்ந்து அதிகரித்து வரும் சொத்து வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி சிரமத்தை
தருவதால், அவற்றை திரும்ப பெற வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வணிக
நிறுவனங்கள், தந்தை, மகன், மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வசித்-தாலும்,
தொழில் நிறுவனம் நடத்தினாலும், அக்கட்டடத்தின் மின்சார சர்வீஸ்கள் ஒருங்கிணைக்கும் பணியை
கைவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 29ல் ஒரு நாள் கடையடைப்பு நடத்துகிறோம்.
மாவட்ட அளவில், 20,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் பங்கேற்கும். 100 கோடி ரூபாய் அளவில்
வர்த்தகம் பாதிக்கும்.இவ்வாறு கூறினார். இணை செயலாளர் ஜெப்ரி உடனிருந்தார்.