/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேராசிரியரிடம் பணம் பறிப்பு பெண் தோழி, டிரைவர் கைது
/
பேராசிரியரிடம் பணம் பறிப்பு பெண் தோழி, டிரைவர் கைது
பேராசிரியரிடம் பணம் பறிப்பு பெண் தோழி, டிரைவர் கைது
பேராசிரியரிடம் பணம் பறிப்பு பெண் தோழி, டிரைவர் கைது
ADDED : மார் 17, 2025 04:48 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை, தோப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகு, 29; தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர். இவருக்கு கடந்த, ௩ம் தேதி திருமணம் நடந்தது. மனைவி வெளி மாநிலத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
ஈரோடு, செங்கோடம்பள்ளம், மாருதி நகரில் வசிப்பவர் வைஷ்-ணவி, 24; இவர், ஈரோடு நாடார் மேட்டில் ஒரு தனியார் கம்பெ-னியில் பணியாற்றி வருகிறார். இவருடன் ரகு ஆறு மாதங்களாக பேசி பழகி வந்துள்ளார். கடந்த, 13ம் தேதி மாலை வைஷ்ணவி தங்கியுள்ள வீட்டுக்கு ரகு சென்றுள்ளார். அங்கு ரகுவுக்கு தெரிந்த திருச்செங்கோட்டை சேர்ந்த சுனிதா இருந்துள்ளார். மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க நான்கு பேர் வந்துள்ளனர். ரகுவை தகாத வார்த்தை பேசி, அடித்து, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவரிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ரகு புகாரின்படி, பணம் பறித்த கும்பலை வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக வைஷ்ணவி, செங்கோடம்பள்ளம், மாருதி நகரை சேர்ந்த கார் டிரைவர் மெய்யரசன், 23, ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் மேலும் இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.