/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார்மென்ட்சில் சம்பள பாக்கி பெண் ஊழியர்கள் போராட்டம்
/
கார்மென்ட்சில் சம்பள பாக்கி பெண் ஊழியர்கள் போராட்டம்
கார்மென்ட்சில் சம்பள பாக்கி பெண் ஊழியர்கள் போராட்டம்
கார்மென்ட்சில் சம்பள பாக்கி பெண் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:07 AM
அந்தியூர், அந்தியூர் அருகே கணபதி காட்டூரில் ஸ்ரீராம் கார்மெண்ட்ஸ் கம்பெனி இயங்குகிறது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மூன்று மாதமும், தையல் பணியாளர்களுக்கு நான்கு வாரமா சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக சம்பளம் கேட்டு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம், கம்பெனியில் இருந்த தையல் மிஷின்களை வெளியே எடுத்து போட்டு, 10க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற அந்தியூர் போலீசார், பெண்கள் மற்றும் நிறுவனத்திரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.