ADDED : செப் 29, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாம்பு கடித்து பெண்
தொழிலாளி சாவு
பவானி, செப். 29-
அம்மாபேட்டை அருகே, கண்ணப்பள்ளி அடுத்த பி.கே. புதுாரை சேர்ந்தவர் மாரிமுத்து, 45; இவரும், இவரது மனைவி செல்வியும், 35, நேற்று காலை மூலக்கடை அருகேயுள்ள ராமகவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள மாதேஷ் என்பவரது தோட்டத்திற்கு, மக்காச்சோளக்கருது அறுவடைக்கு சென்றனர்.
அறுவடை செய்து கொண்டிருந்தபோது, செல்வியை பாம்பு கடித்தது. சத்தமிட்டு அலறிய செல்வி மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே செல்வி இறந்து விட்டதாக கூறினர்.
வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.