/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு
/
மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு
ADDED : நவ 21, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்-வரி, 50; கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது கணவர் கோபா-லுக்கும், 55, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில நாட்க-ளுக்கு முன்பு, அந்தியூர் அருகே பள்ளிபாளையத்திலுள்ள, அண்ணன் கந்தசாமி என்பவரின் வீட்டுக்கு கோபித்து சென்றார்.
இந்நிலையில் நேற்று, மீண்டும் தனது வீட்டுக்கு ஈஸ்வரி வந்-துள்ளார். நேற்று காலை வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பெருந்-துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

