ADDED : செப் 09, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, இளம் பெண் மாயமானார்.
கடத்துார் அருகே சின்னாரிபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரசாள். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் கவுதமி, 22, நம்பியூர் அருகே தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த, 6ம் தேதி தனது உறவினருடன் பண்ணாரி கோவிலுக்கு சென்று விட்டு சத்தியமங்கலம் வந்த கவுதமி, கோபி தாலுகா அலுவலகம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில் சரசாள் நேற்று முன்தினம் புகாரளித்தார்.