/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பெண் போலீஸ்: எஸ்.பி.,யிடம் புகார்
/
நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பெண் போலீஸ்: எஸ்.பி.,யிடம் புகார்
நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பெண் போலீஸ்: எஸ்.பி.,யிடம் புகார்
நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பெண் போலீஸ்: எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : ஜூலை 24, 2025 02:06 AM
ஈரோடு, போலி ஆவணம் தயாரித்து, நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு, பூந்துறை சாலை தெற்கு ஸ்டேட் பேங்க் நகரை சேர்ந்தவர் நேசலிங்கம், 73. இவர், நேற்று ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த புகார் மனு விபரம்: எங்கள் பூர்வீக சொத்து ஊஞ்சலுார்--கொடுமுடி எல்லையூரில் உள்ளது. 1983ல் கொடுமுடி சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்ப பாக சாசனம் மூலம், எனக்கு சொந்தமான பூமி இருந்து வருகிறது.
இந்நிலையில், மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் பெண் போலீஸ் முத்துலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணி சட்டத்திற்கு புறம்பாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மோசடியாக போலி ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை அபகரிக்க முயற்சித்து வருகிறார். என் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்ததை கண்டித்ததால், கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனில் என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும், பெண் போலீஸ் பொய் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இது குறித்து சுப்பிரமணி கூறியதாவது: நிலம் எங்கள் பெயரில் இருப்பதற்கு ஆவணங்கள் உள்ளன. அவர் பொய் புகார் கூறுகிறார். எங்கள் பூமிக்குள் அத்துமீறி நுழைந்து பயிர்களை அழித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். கடந்த, 19ல் அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் தெரிவித்தோம். கொடுமுடி போலீசில் புகார் செய்துள்ளோம். 22ல் ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளோம். எங்கள் நிலத்துக்கு உரிய ஆவணங்களும், நிலத்தில் நேசலிங்கம் அத்துமீறி நுழைந்ததற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. இவ்வாறு கூறினார்.