ADDED : மே 06, 2024 02:26 AM
தி.மு.க., சார்பில்
நீர் மோர் பந்தல் திறப்பு
கோபி: கோபி அருகே ல.கள்ளிப்பட்டியில், தி.மு.க., சார்பில், அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை, வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ் மற்றும் வார்டு நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
இதேபோல் கொளப்பலுார், சிறுவலுார் பஸ் ஸ்டாப்புகளில், நீர்மோர் பந்தலை அமைச்சர்
முத்துசாமி திறந்து வைத்தார்.
கட்டட தொழிலாளி பலிஇன்ஜினியர் மீது வழக்கு
ஈரோடு,: சாரம் சரிந்து கட்டட தொழிலாளி பலியான சம்பவத்தில், இன்ஜினியர் மீது வழக்கு பாய்ந்தது.
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த கட்டட தொழிலாளி தனபால், 54; ஈரோடு, தண்ணீர் பந்தல் பாளையம் செங்குந்தர் நகரில், புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரம் சரிந்து தனபால் தலையில் விழுந்ததில் இறந்தார். காயமடைந்த மூன்று தொழிலார்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்பற்ற நிலையில் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி செய்ய அனுமதித்ததாக கட்டட இன்ஜினியர் பரமேஸ்வரன், மேஸ்திரி சிவக்குமார் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.