/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் நடமாடும் கால்நடைகளால் மாணிக்கம்பாளையத்தில் மல்லுக்கட்டு!
/
சாலையில் நடமாடும் கால்நடைகளால் மாணிக்கம்பாளையத்தில் மல்லுக்கட்டு!
சாலையில் நடமாடும் கால்நடைகளால் மாணிக்கம்பாளையத்தில் மல்லுக்கட்டு!
சாலையில் நடமாடும் கால்நடைகளால் மாணிக்கம்பாளையத்தில் மல்லுக்கட்டு!
ADDED : ஆக 29, 2025 01:34 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 18வது வார்டு மாணிக்கம்பாளையத்தில் ஏராளமான குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பகுதியில் ஒரு சிலர் ஆடு, மாடு, எருமை வளர்க்கின்றனர். காலையில் அவிழ்த்து விட்டால்
அதுவாக மேய்ந்து வீடு திரும்புகின்றன.
இதனால் மாணிக்கம்பாளையத்தில் இருந்து பெரியவலசு, மேட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் எந்நேரமும் எருமை, மாடுகள் நடமாடுகின்றன. ஏற்கனவே நாய்களால் பீதியில் செல்லும் மக்களுக்கு, இந்த கால்நடைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
எந்தப்பக்கம் எப்படி திரும்பும் என்பது தெரியாமல், ஒரு சிலர் விபத்தில் சிக்குவதும் நடக்கிறது. குறிப்பாக நடந்து செல்வோர், பள்ளி-கல்லுாரி மாணவியர், அச்சத்துடனே சென்று வருகின்றனர். சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல வேண்டும். அல்லது வளர்ப்போருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.