நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: மேட்டூர் அணை மேற்கு கரை வாய்க்கால் பாசன பகுதியில், 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இவற்றில் அம்மா-பேட்டை, பூதப்பாடி, சித்தார், பவானி, சின்னியம்பாளையம் உள்-பட பவானி, அந்தியூர் வட்டாரங்களை சேர்ந்த, 11 ஆயிரம் விவ-சாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் மேட்டூர் மேற்கு கரை கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது.
இதில் விடுபட்ட பவானி வர்ணபுரம், குறிச்சி மற்றும் பூனாச்சி சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி தாலுகா அலுவலகத்தில், வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. இதில், 11 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
தேர்தல் வரும், ௨௪ம் தேதி நடக்கிறது. அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.

