/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு இடைத்தேர்தலில் இன்று வேட்பாளர் இறுதிபட்டியல் 'ரிலீஸ்'
/
ஈரோடு இடைத்தேர்தலில் இன்று வேட்பாளர் இறுதிபட்டியல் 'ரிலீஸ்'
ஈரோடு இடைத்தேர்தலில் இன்று வேட்பாளர் இறுதிபட்டியல் 'ரிலீஸ்'
ஈரோடு இடைத்தேர்தலில் இன்று வேட்பாளர் இறுதிபட்டியல் 'ரிலீஸ்'
ADDED : ஜன 20, 2025 07:17 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 58 பேர், 65 மனுக்களை தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் நடந்த மனு பரிசீலனையில் மூன்று மனு தள்ளுபடியாகி, 55 வேட்பாளர்களின், 62 மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறுதல் நடக்கிறது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, பிற வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து, இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
இதுபற்றி தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: இன்று எத்தனை பேர் மனுவை வாபஸ் பெறுவார்கள் என்பது தெரியாது. ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 வேட்பாளர் பெயர் மட்டுமே இடம் பெறும். இதில் நோட்டாவுக்கு ஒரு இடம் சென்று விடும். அதற்கும் மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால், அதற்கேற்ப ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு கூறினர்.