/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட இறுதி சுற்று தண்ணீர் நிறுத்தம்

ADDED : மே 02, 2025 02:00 AM
புளியம்பட்டி:
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட இறுதி சுற்று தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஜனவரி, 10ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நீர் வரத்து மற்றும் மழை பொழிவுக்கு ஏற்ப, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முறை வைத்து, 5 சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி சுற்றுக்கு விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 68.69 அடியாகவும், நீர் இருப்பு, 10.4 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 158 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அனைத்து பாசனத்திற்கும், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குடிநீர் தேவைக்கு மட்டும் பவானி ஆற்றில், 150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.