/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உரிமையாளரை தாக்க முயன்ற பைனான்ஸ் ஊழியருக்கு சிறை
/
உரிமையாளரை தாக்க முயன்ற பைனான்ஸ் ஊழியருக்கு சிறை
ADDED : மார் 24, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூளை, மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 37; ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் ஊழியராக வீரப்பன்சத்திரம், சத்தி ரோட்டை சேர்ந்த அழகிரி, 29, வேலை செய்தார். அலுவலக 'சிசிடிவி' கேமரா பதிவை பார்க்கும் விவகாரத்தில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் செய்து ரஞ்சித்குமாரை, அரிவாளால் அழகிரி வெட்ட முயன்றார்.
அவர் சத்தமிடவே அப்பகுதியினர் வந்தனர். இதைப்பார்த்து அழகிரி ஓட்டம் பிடித்தார். ரஞ்சித்குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் அழகிரியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.