ADDED : ஜூலை 29, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கொடுமுடி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நத்தமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான, 30 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. நேற்று மதியம், 3:30 மணியளவில் புற்களில் தீப்பற்றி எரிந்தது.
கொடுமுடி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலத்த காற்று வீசுவதால் தீ பிற இடங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.