ADDED : ஜூலை 01, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறையை
அடுத்த பிச்சாண்டபாளையம் ப., புத்துார் புதுப்பாளையம்கிராமத்தில், செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக்
கம்பெனி உள்ளது.
இங்குள்ள ஒரு குடோனில் காண்ட்ராக்டர் வெங்கடாசலம்,
பொருட்களை வைத்து பராமரித்து வருகிறார். இந்த குடோனில் நேற்று
அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெருந்துறை தீயணைப்பு நிலைய
வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக்
ரீ-சைக்கிள் மற்றும் தவிட்டு சாக்கு எரிந்து சேதமடைந்து விட்டது.
