/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளியூத்து தேங்காய் நார் மில்லில் தீ விபத்து
/
பள்ளியூத்து தேங்காய் நார் மில்லில் தீ விபத்து
ADDED : அக் 01, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:-அரச்சலுார்-ஈரோடு செல்லும் ரோட்டில், பள்ளியூத்து என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் மில் உள்ளது. இங்குள்ள தேங்காய் நார் கட்டிகள் இருப்பு வைத்திருந்த குடோனில், ஒரு பகுதியில் மட்டும் தீ பிடித்து எரிந்து புகைந்து கொண்டிருந்தது.
இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது அதை தொடர்ந்து சென்ற வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும், தீ பரவாமல் தடுத்தனர். மற்ற தேங்காய் நார் கட்டிகள் காப்பாற்றப்பட்டது. அணைக்கப்படாத புகை பொருள்களால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.