/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள்:இரு அணியாக பேட்டியளித்ததால் பரபரப்பு
/
கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள்:இரு அணியாக பேட்டியளித்ததால் பரபரப்பு
கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள்:இரு அணியாக பேட்டியளித்ததால் பரபரப்பு
கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள்:இரு அணியாக பேட்டியளித்ததால் பரபரப்பு
ADDED : அக் 01, 2025 01:48 AM
கோபி:கோபி நகராட்சியில் நேற்று நடந்த மாதாந்திர கூட்டத்துக்கு பின், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு ஆதரவாகவும் என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இரு அணியாக பேட்டியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
கோபி நகராட்சியின் 30 வார்டுகளில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேர் உள்ள நிலையில், மாதாந்திர கூட்டம் சேர்மன் நாகராஜ் (தி.மு.க.,), கமிஷனர் லதா தலைமையில் நேற்று மாலை நடந்தது. நகராட்சி கூட்டத்தை செய்தி சேகரிக்க மீடியாக்களுக்கு நேற்றும் அனுமதி வழங்கவில்லை. மாலை 5:15 மணிக்கு முடிந்த கூட்டத்துக்கு பின், 9வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், மற்ற ஒன்பது வார்டு கவுன்சிலர்களுடன் சேர்ந்து மீடியாக்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்திலும் கலந்து கொண்டோம். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோட்பாடால், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனுடன் நாங்கள் பயணிக்கிறோம். அவர் என்ன உத்தரவிடுகிறாரோ அதை செய்யத்தான் நாங்கள் இருக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, 16வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் நாகராஜூடன் சேர்ந்து, கோபி நகர செயலாளர் மற்றும் 25வது வார்டு கவுன்சிலர் பிரினியோ கணேஷ், நிருபர்களிடம் கூறுகையில், ''நாங்கள் அனைவரும் அ.தி.மு.க,, வை சார்ந்தவர்கள். அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றோம். தனிநபர் எங்களுக்கு முக்கியம் கிடையாது. கட்சி தான் எங்களுக்கு முக்கியம். பொதுச்செயலர் இ.பி.எஸ்., சொல்வதுதான் முக்கியம். அவர் என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படி தான் நாங்கள் செயல்படுவோம்,'' என்றனர்.