/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டேங்கர் லாரியில் அமில கசிவு பாதுகாப்புடன் மாற்றிய வீரர்கள்
/
டேங்கர் லாரியில் அமில கசிவு பாதுகாப்புடன் மாற்றிய வீரர்கள்
டேங்கர் லாரியில் அமில கசிவு பாதுகாப்புடன் மாற்றிய வீரர்கள்
டேங்கர் லாரியில் அமில கசிவு பாதுகாப்புடன் மாற்றிய வீரர்கள்
ADDED : அக் 01, 2025 01:47 AM
பெருந்துறை:பெருந்துறை சிப்காட்டில், டேங்கர் லாரியில் நேற்று அமில கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு மேட்டூரில் இருந்து, டேங்கர் லாரியில், 21 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலத்தை நேற்று காலை 8:00 மணியளவில் கொண்டு வந்தனர். லாரியை மேட்டூரை சேர்ந்த டிரைவர் செல்லப்பன் ஓட்டி வந்தார்.சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்குள் லாரி சென்றபோது, திடீரென லாரியின் அடிப்பகுதியில் இருந்து அமில கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது தொழிற்சாலையில் இருந்தவர்கள், இதை பார்த்து லாரியை வெளியே திருப்பி அனுப்பினர். உடனே டிரைவர் செல்லப்பன், லாரியை திருப்பி, ஈங்கூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள காட்டுக்குள் சென்று நிறுத்தினார்.
சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பாதுகாப்புடன் மாற்று லாரியில் அமிலத்தை ஏற்றி, நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.