/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்:தண்ணீரை நிறுத்த எதிர்ப்பால் எட்டப்படாத முடிவு
/
காளிங்கராயன் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்:தண்ணீரை நிறுத்த எதிர்ப்பால் எட்டப்படாத முடிவு
காளிங்கராயன் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்:தண்ணீரை நிறுத்த எதிர்ப்பால் எட்டப்படாத முடிவு
காளிங்கராயன் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்:தண்ணீரை நிறுத்த எதிர்ப்பால் எட்டப்படாத முடிவு
ADDED : அக் 01, 2025 01:47 AM
ஈரோடு:காளிங்கராயன் வாய்க்கால் புனரமைப்பு பணி திட்ட கருத்து கேட்பு கூட்டத்தில், 45 நாட்களுக்கு மேல் நீரை நிறுத்தக்கூடாதென விவசாயிகள் கூறியதால், முடிவு எட்டாமல் நிறைவடைந்தது.
ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டு துவங்கி, ஆவுடையார்பாறை வரை காளிங்கராயன் வாய்க்கால் பாய்கிறது. 15,743 ஏக்கர் நிலங்களில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் சாகுபடியாகிறது. ஜூன், 16 முதல், ஏப்., 30 வரை தண்ணீர் திறக்கப்படும். 45 நாட்கள் நீரை நிறுத்தி, பராமரிப்பர். அணைக்கட்டு முதல், 12.3 வது மைல் வரை கான்கிரீட் தளம், சுவருடன், ஈரோடு பகுதியில் சாய கழிவு, சாக்கடை கழிவு கலப்பதை தடுக்க பேபி வாய்க்காலும் அமைத்துள்ளனர். தற்போது, 12.3 முதல், 15.4 மைல் வரை, 5 கி.மீ., துாரத்துக்கு பிரதான வாய்க்காலில் கான்கிரீட் லைனிங், பேபி வாய்க்காலும் அமைக்க, 83.3 கோடி ரூபாய் ஒதுக்கி, மார்ச் முதல் வாரம் முதல் ஜூன், 10 வரை, 90 நாட்களுக்கு தண்ணீரை நிறுத்தி, புனரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதுபற்றி முதல் கருத்து கேட்பு கூட்டம், விவசாயிகள் எதிர்ப்பால் முடிவு எட்டவில்லை. நேற்று, 2 வது கருத்து கேட்பு கூட்டம், நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் நடந்தது.
அதில் நடந்த விவாதம்:உதவி கோட்ட பொறியாளர் உதயகுமார்: பிரதான வாய்க்கால், 5 கி.மீ.,க்கு கான்கிரீட் லைனிங் செய்து, பேபி வாய்க்கால் அமைக்கப்படும். 2 பாலம், 2 கீழ் நிலை பாலம், 1 இடத்தில் கீழே வாய்க்காலும், மேலே சாலையும், பிற இடங்களில் கான்கிரீட் அமைப்பும் ஏற்படுத்தப்படும். இப்பணிக்கு, 90 நாட்கள் தேவைப்படும். மார்ச் முதல் வாரம் தண்ணீரை நிறுத்தி, ஜூன், 10க்குள் பணி முடிந்து வழக்கம்போல, ஜூன், 16ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கலாம்.
காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: மார்ச் 15 முதல் ஜூன், 15க்குள் பணி முடிந்து, ஜூன், 16ல் தண்ணீர் திறக்கலாம். இடைப்பட்ட நாளில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை மாற்றி, கீழ் பகுதிக்கு தண்ணீர் வழங்கலாம்.
காளிங்கராயன் பாசன விவசாயிகள், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சேதுராஜ்: வழக்கம்போல ஏப்., 30ல் தண்ணீரை நிறுத்தி, ஜூன், 16 ல் திறக்க வேண்டும். 90 நாட்கள் தண்ணீரை நிறுத்தினால், ஈரோடு முதல் குறிப்பிட்ட துாரம் வரை கிணற்று பாசனம், கசிவு நீர், மழை நீர் மூலம் பாசனமாகும். கீழ்பகுதி, ஆவுடையார்பாறை வரை கிணறு கிடையாது. 90 நாள் தண்ணீர் வழங்காமல் இருந்தால் கரும்பு, தென்னை முற்றிலும் அழிந்துவிடும். ஒரு போகம் கரும்பு, நெல் பயிர் செய்ய முடியாது. மீண்டும் பயிர் செய்ய, ஏக்கருக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டும். 45 நாளுக்கு மேல் தண்ணீர் நிறுத்த வேண்டுமானால், திட்டத்தை செயல்படுத்த வேண்டாம். அல்லது 2 பகுதியாக இந்தாண்டும், அடுத்தாண்டும் என செய்யுங்கள்.
இதே கருத்தை பல விவசாயிகள் கூறியதால், முடிவு எட்டப்படவில்லை.'இங்கு பெறப்பட்ட தகவல்களை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து, பிறகு தகவல் தெரிவிப்பதாக' செயற்பொறியாளர் திருமூர்த்தி கூறினார்.