/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத கடைகள்:இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள்
/
பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத கடைகள்:இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள்
பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத கடைகள்:இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள்
பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத கடைகள்:இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள்
ADDED : அக் 01, 2025 01:46 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன் புதிதாக, 26 வணிக வளாக கடைகள் கட்ட ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 23 கடைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், நகராட்சி எம்.ஜி.ஆர் வணிக வளாக கடை குத்தகைதாரர்கள் ஆறு பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், மீதமுள்ள மூன்று கடைகள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் கடைகள் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளதாக கூறி, கடைகளை இடித்து அகற்ற கடந்த வாரம், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்று காலை கடைகளை இடிக்கும் பணி மீண்டும் துவங்கியது. முன்னதாக கடைகளில் இருந்த பொருட்களை, வியாபாரிகளே முன்வந்து அப்புறப்படுத்தியதை தொடர்ந்து ஹிட்டாச்சி மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அகற்றும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் கூறுகையில், ''நகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர் வணிக வளாகத்தில் உள்ள, ஆறு கடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொதுப்பணித்துறை சான்று வழங்கியுள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் புதிதாக கட்டப்பட உள்ள மூன்று கடைகளும் அங்கு தான் அமைய உள்ளது. அதனால் கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடைகளை எடுத்துள்ள குத்தகைதாரர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து தரும் வகையில், வியாபாரிகளுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஒதுக்கி தர நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது,'' என்றார்.