ADDED : ஆக 19, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்,:சத்தியமங்கலகத்தை
அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை, தமிழகம்-கர்நாடகா இடையிலான
முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது.
மலைப்பாதை வழியாக
மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் பலத்த காற்று அல்லது மழை காலங்களில் ஒயர் அறுந்து விழுவது
வழக்கம். இந்நிலையில், 25வது கொண்டை ஊசி வளைவு அருகில் கம்பி அறுந்து
விழுந்து நேற்று காலை தீப்பிடித்து
எரிந்தது.
அவ்வழியாக சென்ற
வாகன ஓட்டிகளின் தகவல்படி, தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர்.
தண்ணீரை பீய்ச்சி அடைத்து தீயை அணைத்தனர். இதில் அரை ஏக்கர் பரப்பிலான
அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து விட்டது. மின்வாரிய
ஊழியர்கள் அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
