ADDED : ஆக 19, 2026 06:02 AM

அந்தியூர்:அந்தியூர்
புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு,
அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், வெள்ளைப்பிள்ளையார்
கோவில், கிருஷ்ணாபுரம், தண்ணீர்பந்தல் என பல்வேறு இடங்களில்,
50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள், பல்வேறு கட்சியினரால்
வைக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த
பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அந்தியூர்
பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை கார்னர், அரசு மேல்நிலைப்பள்ளி,
பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் வைத்த பேனர்
அகற்றப்பட்டது.
இதேபோல் கெட்டிசமுத்திரம் பஞ்., பகுதியில்
வைக்கப்பட்டுள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை. சரிந்தோ,
விழுந்தோ விபத்தை ஏற்படுத்தும் முன், பஞ்., நிர்வாகம் அகற்ற, மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
