/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி தண்டு மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
/
சத்தி தண்டு மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED : மே 15, 2025 01:33 AM
சத்தியமங்கலம் :சத்தியமங்கலம், தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மனின் தங்கையாக கருதப்படும், சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா ஏப்.,30ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மே,1ல் கம்பம் நடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு அம்மன் அழைத்தல் நடந்தது. கோவில் முன் அமைக்கப்பட்ட, 6 அடி நீளமுள்ள குண்டத்திற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து,
கோவில் பூசாரி சரத் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து பக்தர்கள், பள்ளி மாணவியர், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்.விழாவையொட்டி, தண்டுமாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு வாண வேடிக்கையுடன், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ல் திருவிளக்கு பூஜை, 17,ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
22ல் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.