/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி
ADDED : ஜூலை 24, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி யூனியனுக்கு உட்பட்ட, 40 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கோபி தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.நிலைய அலுவலர் ரமேஷ்குமார் பயிற்சி அளித்தார். மேற்பார்வையாளர் காமதேனு தலைமை வகித்தார்.
தீயின் வகைகள், தீயை அணைக்கும் முறைகள், பாதுகாத்து கொள்ளும் முறைகள், காஸ் அடுப்பின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு வழி முறைகள், காஸ் சிலிண்டர் கையாளும் விதம், தீயணைப்பு கருவியின் செயல்பாடு என அனைத்துக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்வமாக பயிற்சியில் பங்கேற்றனர்.