தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/7 நாளில் 84 பாம்பு அழைப்பு தீயணைப்பு துறையினர் தகவல்

7 நாளில் 84 பாம்பு அழைப்பு தீயணைப்பு துறையினர் தகவல்

7 நாளில் 84 பாம்பு அழைப்பு தீயணைப்பு துறையினர் தகவல்


ADDED : நவ 16, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 8ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், 84 பாம்பு அழைப்புகளுக்கு சென்று வந்துள்ளதாக

தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த ஒரு வாரத்தில் இரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் தவறி விழுந்த ஐந்து பேர் மீட்கப்பட்டனர். ஒரு குழந்தை, ஒரு ஆந்தை, 6 தெரு நாய்கள், 5 ஆடு-மாடுகள், 6 பூனைகள், 2 உடும்பு, 2 மயில்கள், 4 தேன் கூடுகள் அழைப்புக்கும் சென்று வந்தோம். சமீப காலமாக வீடு, அலுவலகம், ஆலைக்குள் பாம்பு புகுந்துள்ளதாக கூறி பாம்பு அழைப்புகளே அதிகம் வருகிறது. பெரும்பாலும் பாம்புகளை உயிருடன் பிடித்து வனத்துறையில்

ஒப்படைக்கிறோம். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us