ADDED : நவ 16, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்,:அந்தியூர்
பேரூராட்சி சார்பில், 'நான்கு வகை கழிவுகளை பிரிப்போம்' என்பது
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரூராட்சியில்
மக்கும் மற்றும் மக்காத குப்பை, சுகாதார கழிவு ஆகியவற்றை, வீடுகளில்
பிரித்து வழங்குவது குறித்து, செயல் அலுவலர் செல்வக்குமார்
தலைமையில், ரவுண்டானா அருகில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும்
அந்தியூர் பஸ் ஸ்டாண்ட், தேர்வீதி, சத்தி சாலை, தவிட்டுப்பாளையம்
உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்
வழங்கப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரிஉள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.
