ADDED : நவ 16, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டி.என்.பி.எஸ்.சி.,),
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு மையங்களில் நடந்தது.
விண்ணப்பித்த, 2,137
பேரில், 1,250 பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 887 பேர்
புறக்கணித்து விட்டனர். ஈரோட்டில் ஒரு மையத்தில் நடந்த தேர்வை,
கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.
