ADDED : ஏப் 29, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு டீச்சர்ஸ் காலனி கோவலன் இரண்டாவது வீதியில், தனியாருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பிலான காலியிடம் உள்ளது. அங்கு முட்செடி, புல், மரம், செடி-கொடி நிறைய வளர்ந்திருந்தது.
நேற்று காலை, 10:50 மணியளவில் புற்களில் தீப்பிடித்த நிலையில் பரவி முட்செடிகள், மரம், செடி-கொடிகள் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். அணைக்கப்படாத பீடி, சிகரெட்டை வீசி எறிந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
