ADDED : அக் 02, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்ட பட்டாசு விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. தலைவர் கவின் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் காந்தி ராஜா
வரவேற்றார்.
தீபாவளி பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு முன்பாகவே பட்டாசு விற்பனைக்கான உரிமம் கிடைக்கும் வகையிலான நடவடிக்கை-களை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. பட்டாசு விற்-பனை உரிமம் பெறுவதிலான சிரமங்களுக்கு தீர்வு காண
வேண்டும்.
ஈரோடு மாநகர பகுதிகளில் உரிய பட்டாசு விற்பனை உரிமம் மற்றும் அனுமதியின்றி தள்ளுவண்டிகள் மூலம் பட்டாசு விற்-பனை செய்வதை தடுக்கவும், விதிமீறல் இருப்பின் சம்பந்தப்-பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கூட்ட-மைப்பு கேட்டுக்கொண்டது. கூட்டத்தில் துணை தலைவர் ராஜ-கோபால், துணை செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
