ADDED : அக் 02, 2026 03:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சர்மிளா வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி, 'பாட்டு பாட்டன் பாரதி' என்ற தலைப்பிலும், மற்றொரு மாநில செயற்குழு உறுப்-பினர் கவிஞர் ஜீவலட்சுமி, 'பாரதியும் பெண்களும்' என்ற தலைப்-பிலும் பேசினர். கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் முத்துகண்ணன் நன்றி கூறினார்.
