ADDED : அக் 02, 2026 03:05 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் கணேசன், 55, கூலி தொழி-லாளி; கடந்த செப்.,29ல் இரவு 9:00 மணிக்கு பஜாஜ் பைக்கில், கூகலுார் அருகே கொன்னமடை என்ற இடத்தில் சென்றார். அதே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கணேசன், கோவை மருத்துவ கல்-லுாரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். உறவினர் ஞானசேகரன் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
