/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா கல்லுாரிகளில் முதல்கட்ட வளாகத்தேர்வு
/
நந்தா கல்லுாரிகளில் முதல்கட்ட வளாகத்தேர்வு
ADDED : ஜூலை 26, 2025 01:17 AM
ஈரோடு, ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட, வணிக தீர்வுகளுக்கான அக்ரிகேட் இன்டெலிஜன்ஸ் நிறுவனம் சார்பில், சிறப்பு வளாக நேர்காணல் நடந்தது. ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். நிறுவன மனித
வள மேலாளர் பெர்ணான்டோ மற்றும் குழுவினர் துவக்கி வைத்தனர். நந்தா பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். இதை தொடர்ந்து பெர்ணான்டோ சிறப்புரையாற்றினார்.
வளாகத்தேர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளிலிருந்து, 430க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைனில் முதல் நிலைத்தேர்வை எதிர்கொண்டனர்.