/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
/
ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் ஆண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், சிறப்பு விருந்தினர் பீனிக்ஸ் பயிற்சி அகாடமி தலைவர் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை உரையாற்றினார். பன்னாடு மற்றும் உள்நாட்டில் இயங்கிவரும் தலைசிறந்த நிறுவனங்களில் கடந்த ஆண்டில் மட்டும், நந்தா கல்லுாரியின், 87 சதவீத மாணவர் பணி நியமன ஆணை பெற்றன் என்று குறிப்பிட்டார். கல்லுாரி முதல்வர் மனோகரன் வரவேற்றார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். இதை தொடர்ந்து பீனிக்ஸ் பயிற்சி அகாடமி தலைவர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார்.