ADDED : அக் 21, 2026 05:49 AM

பவானிசாகர்:பவானிசாகர்
அணை நீர்த்தேக்க பகுதியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன்
பிடி உரிமம் குத்தகைக்கு விடப்படுகிறது.
தனியார் வசமிருந்த
உரிமம் ஓராண்டுக்கு முன் பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர்
கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. இரு சங்கங்களும்
இரண்டாமாண்டு குத்தகை செலுத்தாததால், மீன்பிடி உரிமம் தனியாருக்கு
விடப்பட்டது.
இந்நிலையில் அணையில் மீன் பிடிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ள, 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீன்பிடி கூலியை
உயர்த்தி வழங்க வலியுறுத்தி, 10 நாட்களுக்கும் மேலாக பணி
புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக அலுவலகம்
முன், சி.ஐ.டி.யு., சார்பில், 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
தற்போது
ரகத்தை பொறுத்து, 40, முதல் 60 ரூபாய் வரை கூலி தருகின்றனர். இது
கட்டுபடியாகாது. முதல் தரத்துக்கு, 100 ரூபாய், இரண்டாம்
தரத்துக்கு, 80 ரூபாய், மூன்றாம் தரத்துக்கு, 70 ரூபாயாக உயர்த்தி வழங்க
வேண்டும். மீன் பிடிக்கும் உரிமை மற்றும் கூலி உயர்வை
கொடுக்கவில்லையேல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு கூறினர்.
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும்
பேச்சுவார்த்தைக்கு வராததால், நாளை (இன்று) ஈரோடு கலெக்டர்
அலுவலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி,
மாலையில் மீனவர்கள் கலைந்து சென்றனர்.
