/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் திருடிய பஞ்., டேங்க் ஆப்பரேட்டர் பணி நீக்கம்
/
குடிநீர் திருடிய பஞ்., டேங்க் ஆப்பரேட்டர் பணி நீக்கம்
குடிநீர் திருடிய பஞ்., டேங்க் ஆப்பரேட்டர் பணி நீக்கம்
குடிநீர் திருடிய பஞ்., டேங்க் ஆப்பரேட்டர் பணி நீக்கம்
ADDED : ஜன 24, 2026 05:49 AM
புன்செய்புளியம்பட்டி; புன்செய் புளியம்பட்டியை அடுத்த மாதம்பா-ளையம் பஞ்., பகுதி மக்களுக்கு, பவானிசாகர் அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பஞ்-சாயத்தில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரியும் சின்னச்சாமி, பிரதான குழாயில் இருந்து திருட்-டுத்தனமாக குடிநீரை தனது தோட்டத்துக்கு பாய்ச்சுவதை, அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர்.
வீடியோ எடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதையடுத்து யூனியன் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இந்-நிலையில் சின்னச்சாமி பணி நீக்கம் செய்யப்பட்-டுள்ளார்.
இதுகுறித்து மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: தற்காலிக தினக்கூலி ஊழியரான சின்னச்சாமி, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் முறை-கேடாக அவர் பொருத்திய குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்-பட்டுள்ளது. அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்-பார்கள். இவ்வாறு கூறினார்.

