ADDED : ஜூன் 15, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தென்மேற்கு பருவமழையால் அமராவதி அணை நீர்மட்டம் நேற்று, 85.11 அடியாக உயர்ந்தது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், அணை பாதுகாப்பு கருதி, எந்நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம்.
எனவே அமராவதி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.