/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனமழையால் பவானியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
/
கனமழையால் பவானியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
ADDED : நவ 15, 2024 01:59 AM
கனமழையால் பவானியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
பவானி, நவ. 15-
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 10:௦௦ மணி முதல் லேசான துாறல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்நிலையில் காலிங்கராயன்பாளையம், குருப்பநாய்க்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதியில், மதியம், 2:௦௦ மணிக்கு மேல் அரை மணி நேரம் கனமழையாக கொட்டியது. இதனால் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அதன் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் மழைநீர் குளம்போல்
தேங்கியது.
ராணாநகர், செங்காடு பகுதிகளின் மழைநீர், சாக்கடையை மூழ்கடித்து, மேட்டூர் சாலையை கடந்து மறுமுனையில் தேங்கியது. காமராஜ் நகரில், 10க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளான, நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, சிங்கம்பேட்டை உள்ளிட்ட இடங்களில், அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. வெள்ளித்திருப்பூர், மாத்துார், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் துாறலும், மிதமாகவும் மழையும் மாறி மாறி பெய்தது.