/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளப்பெருக்கால் சீறிப்பாயும் தண்ணீர்
/
வெள்ளப்பெருக்கால் சீறிப்பாயும் தண்ணீர்
ADDED : ஜூலை 31, 2025 01:58 AM
பள்ளிப்பாளையம், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், ஓடப்பள்ளி தடுப்பணை வழியாக, நுரை பொங்க தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் பகுதி காவிரியாற்றில், இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது.
பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால், இந்த தடுப்பணை வழியாக நுரை பொங்க தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்த கண்கொள்ளா காட்சியை, தடுப்பணை பாலத்தில் செல்வோர் ரசித்தபடி செல்கின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக, தடுப்பணை நீர்தேக்கத்தில் பரிசலில் சென்று மீன் பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.