ADDED : அக் 20, 2024 01:31 AM
டெக்ஸ்வேலியில் உணவு திருவிழா
ஈரோடு, அக். ௨௦-
ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி, தென்னிந்திய அளவிலான உணவு திருவிழாவை, தனியார் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்துகிறது. கடந்த, ௧௮ம் தேதி தொடங்கிய விழா இன்றுடன் நிறைவடைகிறது. மாலை, 4:௦௦ மணி முதல் இரவு, 11:௦௦ மணி வரை நடக்கிறது.
இதில் தென்னிந்தியாவை சேர்ந்த, 75க்கும் மேற்பட்ட ஹோட்டல்களின் வித்தியாசமான உணவு வகைகளை காட்சிப்படுத்துகின்றனர். இன்று நடக்கும் விழாவில் பிரபல இசைக்கலைஞர் தனஞ்செய் முரளிதரன் பங்கேற்கிறார். உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கூப்பன் கொடுக்கப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்பட இருக்கிறது. குழந்தைகள் விளையாடி மகிழ பிளே ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் ராஜசேகர், செயல் இயக்குனர் உமா ராஜசேகர் தலைமையில், அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து, உணவு திருவிழா ஸ்டால்களை பார்வையிட்டார். உணவுத்துறை சார்ந்த சிறப்பு பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உணவுத்துறை சார்ந்த கல்லுாரி மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர். அனுமதி இலவசம்.