/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உணவு பாதுகாப்பு உரிமம், சான்று வழங்கல் முகாம்
/
உணவு பாதுகாப்பு உரிமம், சான்று வழங்கல் முகாம்
ADDED : டிச 05, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், வணிக உரிமம், பதிவு சான்று வழங்கும் முகாம் நடந்தது.
அம்மாபேட்டை சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், பவானி வட்டார தலைவர் சுரேஷ் ஆகியோர்
முன்னிலை வகித்-தனர். சங்க செயலாளர் ரமேஷ் என்ற கோவிந்தசாமி வரவேற்றார்.அம்மாபேட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்குமார், 30 வணிகர்களுக்கு பதிவு உரிமம் மற்றும்
சான்றிதழ்களை வழங்-கினார். பொருளாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.