/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
/
ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ADDED : நவ 26, 2024 06:43 AM
தாராபுரம்: தாராபுரத்தில் வசந்தா ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில், கடந்த, 23ம் தேதி குடும்பத்துடன் ஒருவர் அசைவ உணவு சாப்பிட்டார். அப்போது சிக்கன் சாப்பிட்ட அவரது குழந்தை வாந்தி எடுத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்து உணவை முகர்ந்து பார்த்தபோது, கெட்டுப்போன வாடை அடித்தது. ஓட்டல் சமையல் அறைக்குள் சென்றபோது, இறைச்சி மற்றும் பழச்சாறும் கெட்டுப்போன நிலையில் இருந்தது தெரிந்தது. இதனால் ஓட்டல் ஊழியர்களை கண்டித்து, வாக்குவாதம் செய்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கும் தகவல் கொடுத்தார். தாராபுரம் போலீசார் சமா-தானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை, ஓட்டலில் நேற்று ஆய்வு செய்தார். கடை ஊழியர்களை எச்சரித்து அபராதம் விதித்தார். பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓட்டல்களிலும் ஆய்வு செய்தார். இதில் பிளாஸ்டிக் பயன்-படுத்திய ஒரு கடைக்கு, 2,௦௦௦ ரூபாய் அபராதம், சுகாதார குறை-பாடு இருந்த மூன்று கடைகளுக்கு தலா, ௧,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தார்.