/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலமுறை ஊதியம் கோரிசத்துணவு ஊழியர் தர்ணா
/
காலமுறை ஊதியம் கோரிசத்துணவு ஊழியர் தர்ணா
ADDED : ஏப் 18, 2025 01:09 AM
ஈரோடு:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் விஜயன், பழனியம்மாள், இந்திராணி, நிர்மலா, செல்வி, கிருபாகரி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் உட்பட பலர் பேசினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ௨016-17ல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சமையலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை, 5 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.