/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெளிநாடு முதலீட்டால் தீமை அதிகம் கள் இயக்க நிர்வாகி விளக்கம்
/
வெளிநாடு முதலீட்டால் தீமை அதிகம் கள் இயக்க நிர்வாகி விளக்கம்
வெளிநாடு முதலீட்டால் தீமை அதிகம் கள் இயக்க நிர்வாகி விளக்கம்
வெளிநாடு முதலீட்டால் தீமை அதிகம் கள் இயக்க நிர்வாகி விளக்கம்
ADDED : பிப் 08, 2024 01:31 AM
ஈரோடு,:'வெளிநாட்டு முதலீடுகளை, தமிழகத்தில் நிறுவுவது என்பது, நன்மைகளை விட தீமைகளையே அதிகம் தரும்' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தனியார் பங்களிப்பு வசதிகளை ஈர்க்கும் வகையில், தமிழக அரசு கடந்த மாதம், 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தியது. இதன் மூலம், 5.5 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை கடந்து, 5 லட்சத்து, 64,180 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. புதிதாக உருவாகும் வேலை வாய்ப்புகளால், லட்சக்கணக்கான குடும்பங்கள் முன்னேற்றம் அடையும் என்கிறது.
வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு, தமிழகத்தில் சிவப்பு கம்பளம் விரித்து விடப்பட்டதன் விளைவாக, நிலம், நீர், ஆகாயம், காற்று, மக்களின் உடல் நலன் என பலவும் பாதிக்கும்.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் ஆண்டுக்கு, 30,000 கோடி ரூபாய் அளவில் அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது. அதேநேரம் நொய்யல் நதி, ஆலைக்கழிவால் செத்துப் போய்விட்டது.
அப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீர் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல, வரவுள்ள முதலீடுகள் சூழலை கெடுப்பதாக இருக்கும்.
இயந்திர பயன்பாடு காரணமாக வேலைவாய்ப்பும் அவ்வளவாக இருக்காது. அதேநேரம், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் கள்ளுக்கான தடை, 33 ஆண்டாக தொடர்கிறது.
கள்ளை பாட்டில், பவுச், டின், டெட்ரா பேக், டப்பாவில் அடைத்தும், மதிப்பு கூட்டிய பண்டமாகவும், மேலை நாடுகளில் பயன்படுத்தும் உணவு பொருளாகவும் விற்றால் வருவாயும், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
தமிழக அரசு வெளிநாடு முதலீடுகளை, இயற்கையை காக்கும் வகையிலானவற்றை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

