/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வன விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்த வனத்துறை
/
வன விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்த வனத்துறை
ADDED : ஏப் 24, 2025 01:55 AM
காங்கேயம்:
காங்கேயம் அடுத்துள்ள, ஊதியூர் காப்புக்காட்டில் வன விலங்குகளுக்கு வனத்துறை மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் மலை, 13 கி.மீ., சுற்றளவு கொண்டது. இந்த மலையில் குரங்குகள், மான்கள், முள்ளம்பன்றிகள், முயல், கீரி, மயில்கள், காட்டுப்
பன்றிகள் முள்எலிகள், மரநாய்கள் வசிக்கின்றன. போதிய அளவில் மழை பெய்து வனம் செழிப்பாக இருக்கும் கால கட்டங்களில், மலையில் கிடைக்கும் காய், கனிகளை உண்டு வாழ்கின்றன. போதிய மழை இல்லாமல், மரங்கள் காய்ந்து கிடக்கும் சீசன்களில், அடிவார பகுதியில் உள்ள குடியிருப்புகள், விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வந்துவிடும்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக காங்கேயம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக மான்கள், குரங்குகள் காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது தொடர்கிறது. ஊதியூர் காப்புக் காட்டில் வன விலங்குகள் தாகத்தை தீர்க்க, காங்கேயம் வனத்துறை அலுவலர்கள், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

