/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
7 ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

ADDED : ஜன 20, 2024 07:37 AM
புன்செய்புளியம்பட்டி : பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து, கடந்த, 15ம் தேதி வெளியேறிய சிறுத்தை, ராஜன் நகர் அருகே காந்திநகர் கிராமத்தில் சுப்புராஜ் தோட்டத்தில் புகுந்து, மூன்று ஆடுகளை கடித்து கொன்றது.
ஆய்வில் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகவே, சுப்புராஜ் தோட்டத்து வழித்தடத்தில், வனத்துறையினர் கேமரா பொருத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜன்நகரில் வெள்ளியங்கிரி தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, நான்கு ஆடுகளை அடித்து கொன்றது. அங்கும் வனத்துறையினர் ஆய்வு செய்து, கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஏழு ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
முதற்கட்டமாக தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பதிவுகளை கண்காணித்தபின், கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம். சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.