/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளியாக நடித்து திட்டம் தீட்டிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உருக்கம்
/
தொழிலாளியாக நடித்து திட்டம் தீட்டிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உருக்கம்
தொழிலாளியாக நடித்து திட்டம் தீட்டிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உருக்கம்
தொழிலாளியாக நடித்து திட்டம் தீட்டிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உருக்கம்
ADDED : மே 24, 2025 01:08 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட மத்திய சுமை துாக்குவோர் சங்கம் சார்பில், ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இருந்து மே தின பேரணி நேற்று நடந்தது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், துவக்கி வைத்து பேசியதாவது:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமாவில், சில படங்களில் சுமை துாக்கும் தொழிலாளியாகவே நடித்தார். அப்பணியின் சிரமத்தை உணர்ந்து, அவர்களுக்காக பல திட்டங்களை வழங்கினார். சுமை துாக்கும் தொழிலாளர்கள், அவர்கள் பணி செய்யும் பகுதியிலேயே தொழிற்சங்கங்களை அமைத்து, ஒற்றுமையுடன் செயல்பட வழி வகுத்தார். உங்களை போன்ற தொழிலாளர்கள் வாழ திருப்பூரில் முடங்கிப்போன தொழிற்சாலை, நலிவடைந்த பனியன் ஆலைகளை காக்க, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கி, சுத்திகரிப்பு நிலையம் செயல்பட ஜெயலலிதா வழிவகுத்தார். உங்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்க, 2026ல் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமையும். இவ்வாறு பேசினார்.
மத்திய பஸ் ஸ்டாண்ட், சத்தி சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் பேரணி நிறைவடைந்தது. முன்னதாக பணியின்போது உயிரிழந்த, 7 சுமை துாக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா, 15,000 ரூபாய் வீதம், அ.தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கருப்பணன், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, நிர்வாகிகள் ரத்தன் பிரத்வி, மல்லிகா, கேசவமூர்த்தி, ஜெகதீசன், பழனிசாமி உட்பட பலர் பேரணியில் பங்கேற்றனர்.
தேனீக்களால் 'பரபர'
பேரணி துவங்கும் முன் பலத்த காற்று வீசியதால், அப்பகுதி மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து பறந்தது. இதனால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பலரும் தலையில் துண்டை போட்டு தேனீக்களிடம் இருந்து தற்காத்து கொண்டனர். 10 நிமிடம் வரை தேனீக்கள் சுற்றிய நிலையில், வேறிடத்துக்கு பறந்த பின், பேரணி புறப்பட்டது.