/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நல்லா ஓடையில் டி.டி.எஸ்., மீட்டர் அமைக்க அடிக்கல்
/
நல்லா ஓடையில் டி.டி.எஸ்., மீட்டர் அமைக்க அடிக்கல்
ADDED : நவ 23, 2024 01:33 AM
நல்லா ஓடையில் டி.டி.எஸ்., மீட்டர் அமைக்க அடிக்கல்
சென்னிமலை, நவ. 23-
பெருந்துறை சிப்காட் வளாகம், அதை சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க, மாசடைந்த நிலத்தடி நீரை அகற்றி, சுத்திகரிப்பு செய்ய கடந்தாண்டு நவ.,ல் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவிக்கப்பட்டது. தவிர நல்லா ஓடை கசிவு நீரில் கலந்துள்ள உப்பின் அளவீடு கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும் வெளிப்படை தன்மை, மக்கள் அறியும் வகையில் ஆன்லைன் டி.டி.எஸ்., மீட்டர் அமைக்க கோரிக்கை எழுந்தது.
இதன்படி சிப்காட்டின் இறுதியில், ஆறாவது குறுக்கு சாலை பகுதி, பாலத்தின் வழியாக வெளியேறும் கசிவு நீரில் கலந்துள்ள உப்பு அளவை அறியும்படி, 2.82 லட்சம் ரூபாயில் டி.டி.எஸ்., மீட்டர் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நாட்டினார். ஒரு மாதத்துக்குள் இப்பணியை முடித்து, அளவீடு செய்ய அறிவித்தனர்.

