/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
/
8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஆக 07, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாநகராட்சி 42வது வார்டுக்கு உட்பட்ட வளையக்கார வீதி, அக்ரஹார வீதியில், ரூ.9 லட்சத்தில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அதேபோல, கலைஞர் நகர், கிருஷ்ணம்பாளையம், வீரப்பன்சத்திரம் என மொத்தம், 8 இடங்களில், 88 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, சிறுபாலம், மழைநீர் வடிகால் போன்ற பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.